வெளியிட்ட தேதி : 17.11.2012

1 - இந்திய மொழிகளில், அனைத்தையும் விட‌ குறைந்த மெய்யெழுத்துக்களைக் கொண்டது.
2 - பண்டைய உலக மொழிகளில், இன்னமும் அதன் பண்டைய சுவைகளை தக்கவைத்துள்ள‌ மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
3 - தமிழ் சுருக்கமான வார்த்தைகளை கொண்டு விளக்கமாக‌ எடுத்துரைக்கும் மொழி / குறைந்த‌ எழுத்துக்களை உடைய‌ மென்மையான‌ மொழி.
4 - மிகவும் வளமான இலக்கியங்களை உடைய‌ மொழி.
5 - விளக்கமான இலக்கணம் வகுக்கப்பட்ட‌ பண்டைய உலக மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.
6 - தமிழ் வளர்ச்சி அடைந்த‌ இயங்குனிலை மொழியாகும். உதாரணத்திற்கு தமிழின் முன்னிடைச்சொற்கள் உச்சரிப்பு தனியாகவும், அல்லது பெயர்ச்சொற்களுடன் இணைக்கப்பட்டும்
உச்சரிக்கப் படலாம்.
7 - தமிழ் மொழி, தன் எழுத்துகள் / வரிவடிவம் (ஸ்கிரிப்ட்) பிறமொழிகளை எவ்வகையிலும் சாராது, தனக்கு மட்டுமே சொந்தமாகக் கொண்ட‌ தனி மொழியாகும்.