வெளியிட்ட தேதி : 18.05.2013
 1. மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
 2. மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
 3. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
 4. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
 5. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
 6. மீதூண் விரும்பேல்.
 7. முகத்துக்கு முகம் கண்ணாடி
 8. முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
 9. முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
 10. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
 11. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
 12. முதல் கோணல் முற்றுங் கோணல்
 13. முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
 14. முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
 15. முருங்கை பருத்தால் தூணாகுமா?
 16. முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
 17. முள்ளை முள்ளால் எடு.
 18. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
 19. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
 20. முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
 21. முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
 22. முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
 23. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
 24. மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.