வெளியிட்ட தேதி : 18.05.2013

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
புயலுக்குப் பின்னே அமைதி.
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூ விற்ற காசு மணக்குமா?
பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.