வெளியிட்ட தேதி : 18.05.2013

நுணலும் தன் வாயால் கெடும்.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
நூல் கற்றவனே மேலவன்.
நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
நூற்றைக் கெடுத்தது குறுணி.
நெய் முந்தியோ திரி முந்தியோ.
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
நெருப்பில்லாமல் புகையாது.
நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
நேற்று உள்ளார் இன்று இல்லை.
நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நோய் கொண்டார் பேய் கொண்டார்.
நோய்க்கு இடம் கொடேல்.