ஒரே வரியில் கூறிவிடலாம். பிளாட்டினம் தங்கத்தினை விட, அரிதான, வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் உலோகம் ஆகும். ஆனால் குறைந்தபட்சம் தங்கத்தின் விலையிலிருந்து இரு மடங்கு விலையுயர்ந்ததாகும்.

தங்க‌ ஆபரணங்களை விட‌ பிளாட்டினம் ஆபரணங்கள் விலை உயர்வாக‌ விற்க்கப்படுவதன் காரணங்கள்

01. விலைமதிப்புள்ள‌ உலோகங்கள், எடை அடிப்படையில் வாங்கி விற்கப்படும். பிளாட்டினம் கிட்டத்தட்ட இரு மடங்கு தங்கத்தின் எடையுடையது.

02. பெரும்பாலும் தங்க நகைகளின் தூய்மை 58.5% (14 காரட்) மற்றும் பிளாட்டினம் நகைகளின் தூய்மை 95% ஆக‌ உள்ளது.

03.பிளாட்டினம், தங்கத்தை விட அவுன்ஸ் ஒன்றுக்கு அதிக விலை ஆகும்.

04. பிளாட்டினம் மிகவும் கடினமான உலோகமாதலால், ஆபரண‌ வேலை செய்ய‌ கடினம் ஆகும். ஆகவே ஒரு சிறு ஆபரணம் உருவாக்க, தொழிலாளர் செலவு(செய் கூலி) அதிகமாக உள்ளது.

பிளாட்டின நகைகளின் வெள்ளை நிறத்தினை தக்கவைத்துக்கொள்ள முலாம் பூச்சு தேவைப்படுவதில்லை. பிளாட்டினம் இயற்கையாகவே வெண்மை நிறம் கொண்டது. தங்கம் போன்று எளிதில் கருத்துப் போவதில்லை. பராமரிப்பும் குறைவாகும். மேலும் ஆபரணங்களால் ஏற்படும் அரிப்பு(ஒவ்வாமை) பிளாட்டினம் அணிவதால் ஏற்படுவதில்லை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.