ஒரு "சுவிச்சர்லாந்து தயாரிப்பு" என‌ கைக்கடிகாரங்களில் பார்க்கும் போது, திறம், நம்பகத்தன்மை, கைத்திறன், மற்றும் துல்லியம் என‌ பலருக்கும் நினைவில் வரும். சுவிஸ் செய்யப்பட்ட கைகடிகாரங்களின் நுணுக்கம், மற்றும் பெரிய‌ அளவிலான‌ வேலைப்பாடுகள் காரணமாக உலகின் புகழ்பெற்ற கடிகார பிராண்ட்களாக‌ மாறிவிட்டது.

நீண்ட காலமாக, சுவிஸ் கடிகார பிராண்ட்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் பிரபலமான கடிகாரங்களாக‌ மாறுதற்கு இதுவே காரணமாகும். சுவிஸ் வாட்ச்களில், அதன் முட்களின் துல்லியமான‌ இயக்கமே சிறப்பம்சமாகும். உலகின் வேறு எந்த கடிகாரங்களை விடவும் மிகவும் துல்லியமான இயக்கத்தினை இவ்வகை கடிகாரங்கள் தருகின்றன‌.

சுவிஸ் கைக்கடிகாரங்கள் கௌரவம், பாரம்பரியம், செயல்திறன், மற்றும் தரத்தை குறிக்கும் சின்னமாக‌ விளங்குகின்றன‌.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.