சரஸ்வதி தேவி பாடல்கள்
சரஸ்வதி தேவி பாடல்கள், ஸ்லோகம், மந்திரம், ஸ்தோத்திரம், சரஸ்வதி நமஸ்துப்யம் பக்தி பாடல் மற்றும் சரஸ்வதி நவராத்திரி பாடல்கள் வரிகள்.
சரஸ்வதி தேவி பக்தி பாடல்கள்
சரஸ்வதி தேவியை வணங்கும் போது அவருக்குரிய காயத்ரி மந்திரம், சரஸ்வதி மந்திரம் கூறுவதன் பயனாக அன்னை கலைவாணியின் அருளை பரிபூரணமாக பெறலாம். அதிலும் குறிப்பாக ஆயுத பூஜை எனப்படும் சரஸ்வதி பூஜையின் போது அவருக்குரிய மந்திரங்களை உச்சரித்தும் அன்னையின் நல்லருளைப் பெற்றிடலாம்.
சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.
ஸ்ரீ சரஸ்வதி பீஜ மந்திரம்
Saraswati Beej Mantra
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸரஸ்வத்யை நம: ।