சபரிமலை : முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி உண்டா?
ஆன்லைன் முன்பதிவு இப்படியே தொடர்ந்தாலும், முன்பதிவு செய்யாத பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தேவசஸ்வம் போர்டின் கோரிக்கையும் விருப்பமும் ஆகும்.
Sabarimalai Online Booking system : ஐயப்ப பகதர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களையும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கும்படி திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன் கேரள அரசிடம் கேட்டுள்ளார். வழக்கமாக மார்கழி, தை மாதம் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும் . அதுபோல சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலையில் தினசரி 45 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்த கோபன் பக்தர்களுக்காக கேரள அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
பொதுவாக பக்தர்கள் சபரிமலைக்கு பெருவழிப் பாதை வழியாக வருவது வழக்கம். ஆனால் கொரோனாவின் தாக்கம் முழுமையாக மாறாததால் பெருவழிப் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனினும் மகரவிளக்கு தரிசனத்த்ற்காக பக்தர்களை இந்தப் பாதையில் அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆன்லைன் முன்பதிவு இப்படியே தொடர்ந்தாலும், முன்பதிவு செய்யாத பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தேவசஸ்வம் போர்டின் கோரிக்கையும் விருப்பமும் ஆகும். இதில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் அந்த கோரிக்கையில் கூறியுள்ளார்.
உங்கள் கருத்து : comment