கம்மம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். ஆந்திர‌ மாநிலத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நகரம் தலைந‌கர் ஹைதராபாத்திலிருந்து 190 கி.மீ (120 மைல்) கிழக்கே அமைந்துள்ளது. கம்மம் நகரம் கிருஷ்ணா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்றான‌ முன்னேரு ஆற்றின் ( Munneru ) நதிக்கரையில் அமைந்துள்ளது. கம்மம் நகரம் மலை உச்சியில் அமைந்துள்ள‌ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நரசிம்ம சுவாமி கோவிளுக்காக‌ பிரசித்தி பெற்றது. இடைக்காலத்தில் நகரத்தின் பெயர் கம்மமேடு என‌ (Kammamet) அறியப்பட்டது எனப் பல பண்டைய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணைக் கவரும் ஸ்தம்பாத்ரி (Stambahdri) திருவிழா கம்மம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றாகும். அருகிலுள்ள பகுதிகளில் உள்ள‌ மக்கள் இத்திருவிழா காண கம்மம் நகருக்கு வருகின்றார்.

கம்மம் அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்

கம்மம் கோட்டை (Khammam Fort)

ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணிகள் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை கொண்ட‌ கோட்டையானது 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை கம்மம் நகரின் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விள்ங்குகிறது.

பப்பி கொண்டலு மலை

கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேடக், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் அங்கமாகவும் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளது. பப்பி கொண்டலு மலைகளில் அமைந்துள்ள முனிவாட்டம் எனும் ரம்மியமான நீர்வீழ்ச்சி பிரசித்தி பெற்ற‌ சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. இந்நீர்வீழ்ச்சிப்பகுதியானது நிசப்தம் நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை எழில் பொங்கும் தலமாக‌ ஜொலிக்கிறது.

ஜமாலபுரம் கோயில்

கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த ஜமாலபுரம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சின்ன திருப்பதி கோயில் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. 1000 வருடங்கள் பழமையான கோயில் என்பதால் இது யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. விஷ்ணு பக்தர்கள் மிகவும் விரும்பும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த கோயிலுக்கு மிக அருகிலேயே அமைந்த‌ சூசிகுட்டா மலை ஜபாலி முனிவருடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இம்மலையில் கடுந்தவம் புரிந்த‌ ஜபாலி முனிவருக்கு வெங்கடேஸ்வரர் தரிசனமளித்து வரங்கள் அருளியதாகவும் புராணிகக் கதை கூறுகிறது.

பர்ணசாலை (Paranasala)

பர்ணசாலை, பத்ராச்சலத்திலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புராணங்களின் படி, ஸ்ரீ இராமபிரான் (இராம‌ச்சந்திர‌ மூர்த்தி) தனது 14 வருட‌ வனவாசத்தின்போது சில வருடங்களை இங்கே களித்ததாக‌ நம்பப்படுகிறது. மேலும் சீதா தேவியை இராவ‌ணன் கவர்ந்து செனற‌ இடமாகவும், மாரீசன் வதைக்கப்பட்ட‌ இடமாகவும் நம்பப்படுகிறது.

அதோடு இராம பிரான் பர்ணசாலா கிராமத்தின் காடுகளில்தான் குடிசை கட்டி வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்துக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையில்தான் சீதா தேவி இராமாயண காலத்தில் நீராடியதாகவும், துணிகளை சுத்தம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

அரக்க ராஜாவான‌ "ராவணன்" ஆற்றின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ள‌ மலை மீது தனது புஷ்பக விமானத்தை நிறுத்தியதாகவும், சீதா தேவியை கொண்டு செல்லும்போது பூமியிலிருந்து மண்ணோடு சேர்த்து பெயர்த்து சென்ற‌ பள்ளம் இங்கே காணலாம்.

பத்ராச்சலம் (Bhardrachalam) கோவில்


புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணத்துடன் பத்திராச்சலமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இராமர், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது தங்கியதாகக் கருதப்படும் பர்ணசாலை பத்திராசலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இன்று பத்திராசல இராமர் கோவில் அமைந்துள்ள இடத்தில் கோதாவரி நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது.

பாலாயிர் ஏரி

கம்மம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மனித முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை ஏரி நாகார்ஜுனசாகர் அணைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.1748 ஹெக்டேர் பரப்பளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி 2.5 டி.எம்.சி நீரை சேமிக்கக்கூடிய கொள்ளளவை கொண்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கான மட்டுமல்லாமல் மீன் வளர்ப்புக்கும் இந்த ஏரி பயன்பட்டு வருகிறது.

பலவிதமான‌ நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த பாலாயிர் ஏரி கம்மம் நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.