கணினிகள், அதன் செயல்படும் கோட்பாடுகள் அல்லது உள்ளமைவை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இங்கு உள்ளமைவை எனப்படுவது, கணினியின் அள‌வு, கணக்கீடு வேகம் சேமிப்பு கொள்ளளவு என்பதாகும்.

செயல்பாடு கோட்பாட்டினை அடிப்படையாக கொண்ட‌ கணினி வகைகள்

கணினிகள் செயல்பாடு கோட்பாட்டின் படி மூன்று வெவ்வேறு வகைகளாக‌ உள்ளன.

  1. அனலாக் கணினி (Analog Computers)

  2. டிஜிட்டல் கணினி (Digital Computers)

  3. ஹைபிரிட் கணினி (Hybrid Computers)

அனலாக் கணினி

அனலாக் கணினியென்பது மதிப்புகளை தொடர்ச்சியான வரம்பில் கணக்கிடும் கருவியாகும். அனலாக் கணினிகள் , தொடர்ச்சியாக மாறுபடும் அளவுகளை கையாளுவதால், இவ்வகைக்கணினிகளால் வழங்கப்படும் முடிவுகள் தோராயமாக இருக்கும். இவை மின்னழுத்தம், அழுத்தம், வெப்பநிலை, வேகம் போன்ற இயற்பியல் மாறிகளைக் கையாள பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் கணினி

ஒரு டிஜிட்டல் கணினி எண்முறை தரவுகளின்படி செயல்படுகிறது. அது இரண்டு இலக்கங்களை, 0 மற்றும் 1 கொண்ட‌ இரும எண் முறைமையை பயன்படுத்தி தரவுகளை சேமிக்கின்றன‌.ஒவ்வொன்றும் ஒரு பிட் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகைக்கணினிக,ள் டிஜிட்டல் மின்சுற்றுகளைப் பயன்படுத்தி , உள்ளீடு(input) அல்லது வெளியீடு(output) குறிகையினை(signal) இரண்டு நிலைகளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நிலைகளும் தர்க்கம் 0 (logic 0)மற்றும் தர்க்கம் 1 (logic 1)எனப்படுகின்றன.

டிஜிட்டல் கணினிகள் மிகவும் துல்லியமான மற்றும் வேகமான முடிவுகளை கொடுக்கும். டிஜிட்டல் கணினிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் பொருத்தமானது.
எனவே டிஜிட்டல் கணினிகள் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் தரவு செயலாக்க துறையில் கூடுதலாகப் பயன்படுத்தபடுகின்றது.

பயன்பாட்டு அடிப்படையில், டிஜிட்டல் கணினிகள் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன,

  1. பொது பயன்பாட்டு கணினிகள்

  2. சிறப்பு பயன்பாட்டு கணினிகளின்

Google

ஹைப்ரிட் கணினிகள்

ஹைப்ரிட் கணினி அனலாக் மற்றும் டிஜிட்டல் கணினிகளின் விரும்பத்தக்கதாக அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.இது பெரும்பாலும், சிக்கலான இயற்பியல் செயல்பாடுகள் மற்றும் இயந்திரங்களின் தானியங்கி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், அனலாக் (அலைமருவி) சாதனங்கள் நோயாளிகள் வெப்பநிலை, இரத்த அழுத்தம் மற்றும் பிற முக்கிய அறிகுறிகளை அளவிடுகின்றன‌. இந்த அளவீடுகளை பின்னர் எண்களாக‌ மாற்றப்பட‌ அக்கருவி/ அமைப்பின் டிஜிட்டல் பாகங்களுக்கு வழங்கப்படுகின்றன‌. இந்த டிஜிட்டல் பாகங்கள் நோயாளியின் முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கவும், எந்த அசாதாரண அளவுகளை கண்டறிந்தால் சிக்னல்களை அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது.

ஹைப்ரிட் கணினிகள் முக்கியமாக சிறப்பு பணிகளை பயன்படுத்தப்படுகின்றன.

Google

உள்ளமைவு(Configuration) அடிப்படையில் கணினிகள் வகைகள்

செயல்திறன் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் அவற்றை நான்கு வெவ்வேறு வகைகளாக‌ வகைப்படுத்தலாம்.அவை

  1. சூப்பர் கணினிகள் (Super Computers)

  2. மெயின்பிரேம் கணினிகள் (Mainframe Computers)

  3. மினி கணினிகள் (Mini Computers)

  4. மைக்ரோ கணினிகள் (Micro Computers)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.