தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடத்தில் 9 பேரும், இரண்டாம் இடத்தை 52 பேரும், 3ம் இடத்தை 137 பேரும் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு முதல் 3 இடங்களை 198 பேர் பிடித்துள்ளனர். அவர்களில் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்களும், 52 பேர் 497 மதிப்பெண்களும், 137 பேர் 496 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.
இது தவிர மற்ற பாடவாரியாக பார்க்கும்போது 50 பேர் தமிழ் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 13 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

கணக்கு பாடத்தில் 29,905 பேரும், அறிவியல் பாடத்தில் 38,154 பேரும் சமூக அறிவியல் 19,680 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு முதல் 3 இடங்களையோ, பாட வாரியாக சென்டம் எடுத்ததோ இல்லை. தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனை கல்வியாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

137 பேர் மாநில அளவில் 3வது இடம்

137 பேர் 496/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் 89% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 86%ம் மாணவர்களும், 92%ம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

10ஆம் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் 97.29% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் 95.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.36% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

100/100 மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்

கணித பாடத்தில் 29,905 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 38,154 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19,860 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர்.

அல்லது

SSLC தேர்வு முடிவுகள் 2013 பின்வரும் வலைத்தளங்களில் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

dge1.tn.nic.in

dge2.tn.nic.in

dge3.tn.nic.in

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.