பாரத‌ நாடு பெரும்பான்மையாக‌ உருவ‌ வழிபாட்டாள‌ர்களைக் கொண்ட‌ நாடாகும். பல‌ நூற்றாண்டுகளாக‌ சிலைகள் அமைத்து வழிபட்டு வருபவர்கள், கடவுள் பக்தியாலும், ஆன்மீக‌ ஈடுபாட்டாலும் மிக‌ உயரமான‌ திரு உருவச்சிலைகளை வடித்துள்ளனர். அவ்வாறு அமைக்கப்பட்டு, உயரத்தில் முதன்மையாக‌ விளங்கும் முதல் பத்து சிலைகளை கீழே காணலாம்.

சிலை
சித்தரிப்பு
இடம்
உயரம்
1
வீர அபய ஆஞ்சநேயர் ஹனுமான் சுவாமி
ஹனுமான்
பரித்தலா, ஆந்திர பிரதேசம்
135 அடி
2
பத்மசம்பவர் சிலை
குரு ரின்போக்சி
ரெவால்ஸ்ர், இமாச்சல பிரதேசம்
123 அடி
3
முருதேஸ்வர் சிவன்
சிவன்
கர்நாடக‌ மாநிலம், முருதேஸ்வர்.
122 அடி
4
பத்மசம்பவர் சிலை
குரு ரின்போக்சி
நாம்சி,  சிக்கிம்
118 அடி
5
ஹனுமான் மூர்த்தி, சிம்லா
ஹனுமான்
சிம்லா, ஹிமாச்சல‌ பிரதேசம்
108 அடி
6
கக்யூ குருமடம்
புத்தர்
டெஹ்ராடூன் , உத்தரகாண்ட் மாநிலம்
107 அடி
7
நந்துரா ஹனுமான்
ஹனுமான்
நந்துரா, மகாராஷ்டிரா மாநிலம்
105 அடி
8
சிவன், ஹர் கி பாவ்ரி
சிவன்
ஹரித்வார், உத்தரகண்ட் மாநிலம்
100 அடி
9
திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர்
கன்னியாகுமாரி, தமிழ்நாடு
95 அடி
10
சின்மயா கணாதீஷ்
கணபதி
கோலாப்பூர், மகாராஷ்டிரா
85 அடி

வீர அபய ஆஞ்சநேயர் ஹனுமான் சுவாமி ‍- 135 அடி

வீர அபய ஆஞ்சநேயர் ஹனுமான் சுவாமி சிலையானது கடவுளான‌ ஆஞ்சநேயர் யை (ஹனுமான்) சித்தரிக்கும் சிலை ஆகும். இச்சிலை இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில், பரித்தலா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் விஜயவாடா நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில், அமைந்துள்ளது.

2003 இல் நிறுவப்பட்ட இச்சிலையே; உலகிலுள்ள‌ ஹனுமானின் உயரமான சிலை, இந்தியாவின் மிக உயரமான சிலை, 135 அடி உயரமும் (41 மீட்டர்)

பத்மசம்பவர் சிலை, ரெவால்ஸ்ர், இமாச்சல பிரதேசம் - 123 அடி

பத்மசம்பவர் திபெத் மற்றும் பூடான் பிரதேசங்களில் புத்த‌ மதத்தினை போதித்து, புத்த மதம் பரவ உதவினார். இவர் இரண்டாவது புத்தர் என்றும், குரு ரின்போக் என்றும் போற்றப்பட்டார். இவருக்காக‌ அமைக்கப்பட்ட‌ 123 அடி உயர‌ சிலையானது, இமாச்சல பிரதேசத்தின் ரெவால்ஸ்ர் ஏரி அருகில் அமைந்துள்ளது. இது இரண்டாவது மிக பெரிய சிலையாக‌ உள்ளது. இச்சிலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.

முருதேஸ்வர் சிலை, - 122 அடி

முருதேஸ்வர், இந்து மத கடவுளான‌ சிவன் யின் மற்றொரு பெயர். இச்சிலை கர்நாடக‌ மாநில‌த்தின், முருதேஸ்வர் நகரில், அரபிக்கடல் கடற்கரையில் அமைந்துள்ள‌ முருதேஸ்வர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.. உலகின் இரண்டாவது உயரமான சிவன் சிலை எனப்பெயர் பெற்றுள்ளது. 

பத்மசம்பவர் சிலை,  நாம்சி,  சிக்கிம் - 118 அடி ‍

இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள 45 மீட்டர் உயர சிலை, மின்னும் செப்பு மற்றும் வெண்கலம் பூசப்ப‌ட்டிருக்கும்,  காண்பவரை ஈர்க்கக்கூடிய குரு ரின்போக்கின் மற்றொரு சிலையாகும். இது தலாய் லாமா வால் அடிக்கல் நாட்டப்பட்டு 2004 ல் முடிக்கப்பட்டு, மக்கள் வ்ழிபாடு மற்றும் பார்வைக்காக‌ திறக்கப்பட்டது. இவ்விடம் புத்தமதத்தினர் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் புனித யாத்திரை தலங்களுள் முக்கியமானதும் பிரபலமானதும் ஆகும். 

ஹனுமான் மூர்த்தி,  சிம்லா - 108 அடி

புத்தர் சிலை, கக்யூ (Kagyu) குருமடம், டெஹ்ராடூன் - 107 அடி

ஹனுமான் சிலை, நந்துரா (Nandura), மகாராஷ்டிரா மாநிலம்- 105 அடி

சிவன் சிலை, ஹர் கி பாவ்ரி, ஹரித்வார், உத்தரகண்ட் மாநிலம் - 100 அடி

திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமாரி, தமிழ்நாடு - 95 அடி

சிலை பண்டைய புலவர் மற்றும் தத்துவவாதி திருவள்ளுவருக்காக‌ அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபி கடல் சங்கமிக்கும், கன்னியாகுமாரியில் ஒரு சிறிய தீவின் மத்தியில் அமைந்துள்ளது.

சின்மயா கணாதீஷ் (Ganadhish), கோலாப்பூர், மகாராஷ்டிரா - 85 அடி

பார்க்க வண்ணமயமாக, நான்கு கைகள் மற்றும் ஐந்து தலை பாம்புடன், மிக பொதுவான வடிவாய் விநாயகர் சித்தரிக்கப்பட்டுள்ளார். இச்சிலை மும்பை, அல்லது புனே யில் அல்ல‌. இது கோலாப்பூர் நகரில் உள்ளது!

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.