ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் (Operating System - OS) நான்காகப் பிரிக்கப்படலாம். அவை கட்டுப்படுத்தும் கணிணியின் வகை மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன‌.

வகைகள்

நிகழ்நேர இயக்க முறைமை (RTOS) - ரியல் டைம் ஆப்ரேட்டிங் சிஸ்டம்

நிகழ்நேர இயக்க முறைமையானது இயந்திரங்கள், விஞ்ஞானபூர்வமான கருவிகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன‌. பொதுவாக இவ்வகை கணிணிகள் பயன்படுத்த வழங்கப்படும் போது ஒரு "சீல் பெட்டியில்" இருக்கும் என்பதால், மிக சிறிய பயனர் இடைமுகத் திறனை கொண்டும், இறுதி பயனருக்கான‌ சேவைகள் அற்றவையாகவும் இருக்கும். நிகழ்நேர இயக்க முறைமையின் ஒரு மிக முக்கிய பங்கு கணினியின் ஆதாரங்களை, எப்பொழுதும், ஒரே சீரான‌ நேரத்தில் நிர்வகித்து துல்லியமாக செயல்படுத்துவதே ஆகும்.

ஒற்றை பயனர், ஒரே பணி

பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த இயக்கு தளம், ஒரு பயனர் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை கணினியின் மூலம் திறம்பட மேலாண்மை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றை பயனர், பலபணி

இது பெரும்பாலான மக்கள் தங்கள் டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்தும் இயக்க முறைமையாகும் (OS). மைக்ரோசாப்டின் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் MacOS இயங்குதளங்கள் இதற்கு உதாரணங்களாகும். ஒரு பயனர் ஒரே நேரத்தில் பல்வேறு நிரல்களை (Programs) செயல்படுத்த‌ உதவுகிறது. உதாரணமாக‌ இவ்வகை இயக்கமுறை பதிவேற்றப்பட்ட‌ கணினியில், ஒரெ நேரத்தில், மின்னஞ்சல், மற்றும் இணையதளத்தினை உலாவியும்(browse), பதிவிறக்கம்(download) செய்யவும் முடியும்.

பல பயனர், பலபணி

இவ்வகை இயக்க முறைமையானது பல்வேறு பயனர் ஒரே நேரத்தில் கணினி ஆதாரங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது. இயக்க முறைமை பல்வேறு பயனர்களின் தேவைகள் சீரான நேரத்தில் செயல்படுத்தியும்,ஒரு பயனரின் பயன்பாட்டுச் சிக்கல் முழு சமூகத்தினை பாதிக்காதவாறும் விளங்குகிறது. UNIX, VMS, mainframe இயக்க முறைமை, மற்றும் MVS போன்ற இயக்க முறைமைகள், பல பயனர் இயக்க முறைமைகளுக்கான‌ உதாரணங்களாகும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.