அந்தமான் & நிக்கோபார் தீவுகள் பல அழகான சுற்றுலா இடங்களை கொண்டதுடன் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கம் எனப்படும். அடர்த்தியான பசுமை மாறா மழைக் காடுகள், சுத்தமான சாலைகள், அதே போல் மாசுபடாத‌ காற்று போன்றவை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது. மலையேறுதல், டைவிங், ஸ்நோர்கெலிங், தீவு முகாம், ஸ்கூபா டைவிங் போன்ற சாகசச் சுற்றுலா ஒருவரை உண்மையாகவே ஈர்த்துவிடும். அந்தமான் & நிக்கோபார் தீவுகள் முற்றிலும், சுற்றுப்புற சூழலுக்கு பாதுகாப்பானதும், ஒருவரின் வாழ் நாளில் ஒரு முறையாவது இததலத்தினை சுற்றிப்பார்ததாக‌ வேண்டும் என்கிற‌ ஏக்கத்தினை நிஜமாகவே ஏற்படுத்தி விடும்!!!.

எப்படி சென்றடைவது

விமான மூலம்

சென்னை மற்றும் கொல்கத்தா விமான‌ நிலையங்களிலிருந்து அந்தமானுக்கு விமானங்கள் உள்ளன‌. ஜெட் ஏர்வேஸ், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வழக்கமாக‌ இயக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் திட்டம் பற்றி தகவல் அறிய‌ இங்கே சொடுக்கவும். இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றி தகவல் அறிய‌இங்கே சொடுக்கவும் அல்லது இங்கே சொடுக்கவும்

கடல் மார்க்கமாக‌

சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து போர்ட் பிளேயருக்கு வழக்கமான பயணிகள் கப்பல் சேவைகள் இருக்கின்றன‌. கப்பல் பிரயாணம் 60 முதல் 50 மணி நேரமாகும். போர்ட் பிளேயர் இந்தியாவின் முக்கிய நகரங்களான‌ சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம், ஆகியவற்றுடன் விமான மற்றும் கடல் வழி போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சியான தீவுகளை சென்றடைய‌ சிறந்த வழி விமான மார்க்கமே ஆகும்.

புவியியல் அமைப்பு மற்றும் இருப்பிடம்

அந்தமான் & நிக்கோபார் தீவுகள், பெரிய & சிறிய தீவுகளாக‌ மொத்தம் 576 தீவுகள் உள்ளன‌. அந்தமான் & நிக்கோபார் தீவுகள், வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் ஒரு குழுவாக‌/ கூட்டமாக‌ அமைந்துள்ளன‌. இத்தீவுகள், மக்கள் குடியேற்றம் மற்றும் குடியேற்றமல்லாத பகுகளாக‌ உள்ளன‌. அந்தமான் & நிக்கோபார் தீவுகள், வடக்கிலிருந்து தெற்குவரை சுமார் 800 கி.மீ. தூரத்திற்கு, நீண்டும், குறுகலாகவும், உடைந்த சங்கிலி போன்ற‌ வளைவாக‌ காணப்படுகின்றது.

போர்ட் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.

வானிலை 23 ° C குறைந்தபட்ச வெப்பநிலை, அதிகபட்ச 30 °C , பொதுவாக இதமாகவும் இருக்கும்.

சிறந்த சுற்றுலா பருவம்: அக்டோபர் முதல் மே வரை
மழைக் கால விடுமுறை : ஜூன் முதல் செப்டம்பர் வரை
உயரம்:. கடல் மட்டத்தில் இருந்து 732 மீட்டர் மாறுபடக்கூடியது

இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.

அமைப்பு வங்காள விரிகுடாவில், 92 ° முதல் 94 ° கிழக்கு தீர்க்கரேகையிலும். 6 ° முதல் 14 ° வட அட்சரேகையிலும் அமைந்துள்ளது.
பகுதி (Area) அந்தமான் மாவட்டம்: 6.408 கீ.மீ
நிக்கோபார் மாவட்டம்: 1.841 கீ.மீ
காடுகள்: 86%
தலைநகர் போர்ட் பிளேயர்
காலநிலை வெப்பம் மற்றும் ஈரப்பதம் உடையது. 70% மற்றும் 90% இடையிலான‌ ஈரப்பதம் உடைய‌ மென்மையான காற்று எப்போதும் வீசுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.